இலங்கை சுதேச அறிவு உள்ளடங்கிய செழிப்பு மிக்க கலாசாரமும் மரபுரிமையும் கொண்ட ஒரு நாடாகும். நாங்கள் செழிப்பு மிக்க இயற்கை மரபுரிமை மற்றும் கலாசாரம் என்ற இரண்டையும் கொண்டுள்ளோம். அதனால், எமது கலாசாரத்தையும் மரபுரிகளையும் ஊக்குவிப்பதற்கும் பேணிப்பாதுகாப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவகங்களுடன் தேசிய ஆணைக்குழு இணைப்பாக்கம் செய்கிறது. நாங்கள் எமது யுனெஸ்கோ உலக மரபுரிமைச் சொத்துக்களின் நிலைபற்றி மிக நெருக்கமாக தொடர் செயலில் ஈடுபடுகிறோம். அத்துடன் இந்த சொத்துக்களைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் பொதுமக்களினதும் தனியார் துறையினதும் பங்கேற்பைப் பெற்றுக்கொள்ளுவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகளை ஊக்குவிக்கிறோம்.

எமது கலாசாரத்தின் ஒப்பற்ற அடிப்படைத் தத்துவங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல முயல்கின்ற அதேவேளையில் எமது கலாசாரத்தினதும் மரபுரிமைகளினதும் விழுமியங்களைப் பாதுகாப்பது பற்றிய பொதுமக்களின் புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்கு இந்த ஆணைக்குழு பல்வேறு சர்வதேச பங்காளர்களுடன் தொடர்பு கொள்கிறது. மேலும் இந்தத் துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஆளணியினருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சியின் ஊடாக தம்மை விருத்திசெய்துகொள்ளுவதற்கு சந்தர்ப்பங்களை வழங்குகின்றோம்.