நிலைபேறான எதிர்காலத்திற்காக யுனெஸ்கோ பல்வேறு வடிவத்தில் விஞ்ஞானத்தை ஊக்குவிக்கிறது. இந்த நோக்கத்தை அடைவதற்காக யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு (SLNCU) சூழலியல் மற்றும் இயற்கை வளங்கள், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி மற்றும் சமூக சேவைகள் அமைச்சுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது.

We provide international liaisons for government initiatives such as Alternative Energy programmes for the energy crisis, waste management systems, development of Science in Secondary Schools, with particular emphasis on வலுசக்தி நெருக்கடிக்காக மாற்று வலுசக்தி நிகழ்ச்சித்திட்டம், கழிவு முகாமைத்துவ முறைமைகள், இரண்டாம் நிலை பாடசாலைகளில் விஞ்ஞான கல்வியை அபிவிருத்தி செய்தல், குறிப்பிட்ட இரசாயனவியலை வலியுறுத்துதல் மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதன் ஊடாக நெனோ தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் போன்ற அரசாங்க முன்னெடுப்புகளுக்காக சர்வதேச இணைப்பை நாம் ஏற்படுத்துகிறோம்.

அதற்கு மேலதிகமாக, யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு (SLNCU) சமூக நிலைமாற்ற முகாமைத்துவத்திற்காக (MOST) கொள்கை, ஆய்வு மற்றும் அமுலாக்கம் என்பவற்றிற்கிடையில் தொடர்பை மேம்படுத்துகிறது. MAB, IOC, உயிரியல் நன்னெறிகள், நீர்சம்பந்தமானவை என்பவற்றை தேசிய ஆணைக்குழுவில் வலுப்படுத்துதல் இந்த ஆணைக்குழுவின் பிரதான பொறுப்புகளாக இருக்கின்றன.

காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்த இடர் குறைப்பு என்பவற்றில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். மேலும் பல்வேறு வாசிக்கும் உபகரணங்களை விருத்தி செய்வதன் ஊடாகவும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதன் ஊடாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்கிறோம். தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுடன் நாங்கள் கலந்துகொண்ட ஆசிய RICE கருத்திட்டம் காலநிலை மாற்றம் மற்றும் அதனோடு ஆக்கபூர்வமாகப் போராடுவது பற்றி சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துகிறது.