கலாசார மரபுரிமை தொட்டுணரக்கூடிய மற்றும் தொட்டுணர முடியாத என்ற இரண்டையும் கொண்டுள்ளது. இந்த மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் யுனெஸ்கோவின் வகிபாகம் முக்கியமானது. மிகச் சிறந்த அமைவிடங்கள் யுனெஸ்கோவினால் உலக மரபுரிமை என பெயர்குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றிற்கு தன்னிகரற்ற உலக பெறுமதி உண்டு. இன்றைய தினத்தில், 1052 உலக மரபுரிமை அமைவிடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 814 அமைவிடங்கள் கலாசார அமைவிடங்களாகவும், 203 அமைவிடங்கள் இயற்கை மரபுரிமைகளாகவும் 35 அமைவிடங்கள் கலாசார மற்றும் இயற்கை மரபுரிமைகள் ஆகிய இரண்டும் கலந்தவையாக இருக்கின்றன.

உலக மரபுரிமை பட்டியலில் சேர்த்துக்கொள்ளுவதற்கு, அமைவிடங்கள் உலகில் மிகப் பெறுமதி மிக்க மிகச் சிறந்த இடங்களாக இருக்க வேண்டும். அத்துடன் பத்து தெரிவுசெய்யும் அளவுகோள்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கொண்டிருக்க வேண்டும்.

  1. மனித படைப்பாளியான மேதையின் தலைசிறந்த படைப்பை பிரதிநிதித்துவப்படுத்துதுல்;
  2. ஒரு முக்கியமான மனித விழுமியத்தைப் பரிமாற்றிக்கொள்ளுதல், நீண்ட காலத்திற்கு முற்பட்டது அல்லது உலகத்தின் கலாசார பிரதேசத்திற்குள் உள்ளது, கட்டிடக் கலையின் அல்லது தொழில்நுட்பத்தின் அபிவிருத்தியைப பற்றியது, நினைவுச்சின்ன கலைகள், நகர திட்டமிடல் அல்லது நிலத் தோற்ற வடிவமைப்பு;
  3. கலாசார பாரம்பரியத்தின் தன்னிகரற்ற தன்மைக்கு அல்லது குறைந்தபட்சம் விதிவிலக்கான சான்றுபகர்தல் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கின்ற அல்லது மறைந்துபோன நாகரீகம் என்பவற்றைக் கொண்டிருத்தல்;
  4. (அ) மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க படிமுறையை(களை) வெளிப்படுத்துகிற ஒரு கட்டிடத்தின் வகை, கட்டிடக்கலை அல்லது தொழில்நுட்ப சேர்க்கை அல்லது நிலத் தோற்றம்;
  5. கலாசாரத்தை (அல்லது கலாசாரங்களை)ப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாரம்பரிய மனித குடியேற்றம், காணி பயன்பாடு அல்லது கடல் பயன்பாடு அல்லது சூழலுடன் மனித ஊடுருவல், குறிப்பாக மாற்றமுடியாத மாற்றங்களின் கீழ் வந்துள்ள வடுபடும் நிலை பற்றிய மிகச் சிறந்த உதாரணம்;
  6. உலகத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புள்ள இலக்கிய படைப்புகள் மற்றும் கலையம்சங்களுடன் கருத்துக்களுடன் அல்லது நம்பிக்கைகளுடன் நேரடியாக அல்லது உணரக்கூடிய வகையில் நிகழ்வுகளுடன் தொடர்புடைய அல்லது உயிர் வாழ்கின்ற பாரம்பரியங்கள். (இந்த அளவுகோல் ஏனைய அளவுகோலுடன் இணைத்து பயன்படுத்துவது விரும்பத்தக்கது என குழு கருதுகிறது);
  7. அதிசிறந்த இயற்கை அதிசயத்தை அல்லது விதிவிலக்குள்ள இயற்கை அழகைக் கொண்டுள்ள மற்றும் அழகியல் முன்னேற்றமுள்ள உள்ளடக்கங்கள்;
  8. வாழ்க்கைப் பதிவுகள் உட்பட பூமியின் வரலாற்றின் பாரிய படிநிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மிகச்சிறந்த உதாரணங்கள், நில வடிவங்களின் அபிவிருத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற குறிப்பிடத்தக்க புவியியல் நடவடிக்கைமுறைகள் அல்லது குறிப்பிடத்தக்க புவிச்சரிதவியல் அல்லது புவிச்சரித தோற்றங்கள்;
  9. நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற குறிப்பிடத்தக்க இயற்கை சார்ந்த அல்லது உயிரியல் சார்ந்த பூகோளம், நன்னீர், கரையோர மற்றும் கடல்சார் இயற்கை முறைமைகள் மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சமூகம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மிகச்சிறந்த உதாரணங்கள்;
  10. விஞ்ஞான மற்றும் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் மிகச்சிறந்த உலக பெறுமதியுள்ள அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இனங்கள் உள்ளிட்ட உயிர் பலவகைமை இருந்த வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க இயற்கை வாழ்விடங்கள் உள்ளடங்கியவை;

இவற்றிற்கிடையே, இலங்கையில் உள்ள எட்டு அமைவிடங்கள் யுனெஸ்கோ உலக மரபுரிமையில் பதியப்பட்டுள்ளன. அவையாவன,

உலக மரபுரிமை அமைவிடம் யுனெஸ்கோ உலக மரபுரிமை என்ற வகையில் திகதி அளவுகோல்
அநுராதபுர புனித நகரம் 1982 II, III, VI
பொலனறுவை புராதன நகரம் 1982 I, III, VI
சிகிரிய புராதன நகரம் 1982 II, III, IV
கண்டி புனித நகரம் 1988 IV, VI
சிங்கராஜ வன ஒதுக்கம் 1988 IX, X
காலி பழைய நகரம் மற்றும் அதன் கோட்டைகள் 1988 IV
தம்புல்ல பொற் கோயில் 1991 I, VI
இலங்கையின் மத்திய மலைநாடு 2010 IX, X


இலங்கையில் மத்திய மலைநாடும் சிங்கராஜ வனமும் மாத்திரம் இயற்கையான உலக மரபுரிமைகளாக இருக்கின்றன. ஏனையவை கலாசார மரபுரிமையாகும்.

இலங்கையர்கள் என்ற வகையில் எமது மரபுரிமைகளைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். அத்துடன் அவற்றைப் பாதுகாத்துககொள்ளவும் வேண்டும்.