Anuradhapuraஅநுராதபுரம் இலங்கையின் முதலாவது தலைநகரமாகும். அது 1500 வருடங்களுக்கு மேலாக அதிகாரமும் செல்வமும் மிக்கதாக இருந்தது. இந்த நகரத்தில் இருந்த மூதாதையர்கள் கி.மு 6ஆம் நூற்றாண்டில் இருந்ததைக் கண்டறிய முடிகிறது. இது கி.மு 3ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட பௌத்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது உலகில் மாபெரும் தொல்பொருளியல் அமைவிடங்களைக் கொண்ட இடமாகப் பெருமை பெற்றிருந்தது. அநுராதபுரம் தலைநகரம் மாத்திரமல்ல பௌத்த மத அபிவிருத்தியில் நெருங்கிய தொடர்புடைய நகரமாகவும் இருந்தது.

மகா விகாரை, ஜேதவன, அபயகிரி போன்ற ஆலய வளாகங்களைக் கொண்டுள்ளதோடு உள் நகரம் சுமார் 200 ஏக்கருக்கு விரிந்துசெல்கிறது. நகரத்தின் தொல்பொருள் 14 சதுர மைல்களுக்குள் விரிந்து பரந்து காணப்படுகின்றன. இவற்றில் சில மாபெரும் பெறுமதிமிக்க கட்;டிடக்கலை அழிவுச் சின்னங்களும் அதிசிறந்த சிலைத் துண்டுகளும் உள்ளடங்குகின்றன. இது 1982ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.