sigiriyaசீகிரிய தொகுதி 600 அடி உயரமான மலையைச் சுற்றி விருத்திசெய்யப்பட்டுள்ளது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டின் தலை நகரமாக செயற்பட்டுள்ளது. அது அழகுமிகு ஓவிய களரியாக இருந்ததோடு கி.பி.5ஆம் நூற்றாண்டில் காசியப்ப மன்னனின் பாதுகாப்பு அரணாகவும்; மாளிகையாகவும் திகழ்ந்தது. கோட்டை ஒரு பாறையின் மேல் கட்டப்பட்டிருந்ததோடு அடிவாரத்தில் நீர் தோட்டங்கள் விரிந்திருந்தன. இந்த நீர்த் தோட்டங்கள் உலகின் புவியியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வனப்புமிகு தோட்டங்களுக்கு இணையாக இரண்டாம் பட்சமாகாத வகையில் இருந்தது. இந்த நீர்த் தோட்டங்கள் பர்சியாவிலும் எகிப்திலும் உள்ள நீர்த் தோட்டங்களை நினைவுபடுத்துகின்றன.

இந்த பாறைத் தோட்டங்கள் கீழைத்தேய நாடுகளில் உள்ள நீர்த் தோட்டங்களுக்கு சமமாக இருப்பதோடு, இவற்றில் உள்ள நேர்த்தியான வேலைப்பாடுகள் ஆச்சரியமூட்டுகின்றன. சீகிரியா சுவர் ஓவியங்கள் கீழைத்தேசத்தில் உள்ள பவித்திரமான சித்திரங்களைப் பிரதிபலிக்கின்றன. அவற்றுடன் பாறையில் சீகிரிய செதுக்கு வேலைப்பாடுகளையும் காணமுடிகிறது. இவை சீகிரியாவுக்கு உலகப் புகழை ஈட்டித் தந்துள்ளது. இது 1982ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.