kandyபிரித்தானியாகள் இலங்கையைக் கைப்பற்றுவதற்கு முன்னர் நாட்டின் கடைசி தலைநகரமாக இருந்தது. இந்த நகரம் பலவகைகளிலும் இலங்கை கலாசாரத்தைக் கொண்டிருந்தது. இங்குள்ள தலதா மாளிகை பௌத்தர்களின் மிகவும் புனிதமான இடமாக திகழ்கின்றது. இது "புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள ஆலயமாகும்" இதைச்சுற்றி தொல்பொருளியல் தொகுதிகளான மன்னனின் மாளிகை, பழைய நகரம் மற்றும் ஏனைய பல மாளிகைகளும் இணைந்து விரிவடைந்துள்ளன. ஏனைய தலைநகரங்களில் உள்ளதைப்போன்று இவை அழிவடையவில்லை. அத்துடன், கண்டி இலங்கையின் கட்டிடக் கலையை இன்னும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. மரத்தில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் சுவர் ஓவியங்கள் என்பவை கேட்போர் கூடத்திலும் தலதா மாளிகையிலும் உதாரணங்களாக மிளிர்ந்துகொண்டிருக்கின்றன. யுனெஸ்கோ கண்டி நகரத்தை 1988ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.