Singharaja Rain Forestயுனெஸ்கோ சிங்கராஜ மழை வனத்தை 1988ஆம் ஆண்டு உலக இயற்கை மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோவினால் அது இயற்கை உயிர்கோள ஒதுக்கம் எனப் பெயர்க் குறிப்பிட்டுள்ளது. இதுதான் இலங்கையின் ஒரே முதனிலை தாழ்நில உலர்வலய மழை வனமாக இருப்பதோடு உலகில் உள்ள கன்னி வனங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. பசுமை வெளியும் மிக உயர்ந்த உயிர் பல்வகைமையும் சிங்கராஜ வனத்தின் தலைசிறந்த பெறுமதியாகும். 60% க்கு மேற்பட்ட மரங்கள் இந்த வனத்தில் மட்டும் இருக்கின்ற மரங்களாகவும் அவற்றில் அநேகமானவை அரிய வகைகளாகவும் இருக்கின்றன.