Galle Fortகாலி நகரமும் அதன் பாதுகாப்பு அரணும் யுனெஸ்கோவின் உலக மரபுரிமைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை ஐரோப்பிய பாரம்பரியங்களுக்கு சொந்தமானது. அத்துடன் இது போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டதாகும். உட்புறமுள்ள நகரமும் எஞ்சியிருக்கின்ற கட்டிட கலையும் அதிசிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரின் காலம் காலி கோட்டைக்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ இந்த இடத்தை 1988ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.