dambullaயுனெஸ்கோவினால் தம்புல்ல 1988ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்புல்ல கல் விகாரை பல குகைகளைக் கொண்டதாக பாரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. வட்டகாமினி அபயவின் காலத்தில் (கி.மு. 1ஆம் நூற்றாண்டு) முதலில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அது பாதிக்கப்பட்ட காலத்திலிருந்து பல புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசி புதுப்பிக்கும் பணி கீர்தி ஸ்ரீ இராஜசிங்கவின் காலத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மாளிகை இலங்கையின் பௌத்த கலை மற்றும் சிலை நிலையமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. இதில் 160 புத்தர் சிலைகள் நிறைந்துள்ளன. போதிசத்தரின் பிரதிமைகளும் தெய்வங்களின் சிறிய சிலைகளும் காணப்படுகின்றன. 20,000 சதுர அடி பிரதேசத்தில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுவர் ஓவியங்கள் கண்டி காலத்தை சித்தரிக்கிற மிக அழகான சித்திர வடிவத்தில் விருத்தி செய்யப்பட்டுள்ளன.